eh
இலங்கைசெய்திகள்

பசிலுக்கு அமெரிக்காவில் பெருமளவு சொத்துக்கள் : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

Share

பசிலுக்கு அமெரிக்காவில் பெருமளவு சொத்துக்கள் : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

இலங்கையில் இருந்து கொண்டு அமெரிக்காவில் (United States) தனது பெயரிலும் , தன்னுடைய குடும்பத்தாரது பெயர்களிலும் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) பாரியளவு செத்துக்களை சேமித்து வைத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

நிதி குற்ற புலனாய்வு பிரிவில் நேற்றைய தினம் (03.01.2025) வாக்குமூலம் வழங்க வந்திருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “பசில் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்காவில் உள்ள செத்துக்கள் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அது தொடர்பில் நான் எனது தெளிவுபடுத்தலை வழங்கினேன். இது தெடர்பில் எழுத்துமூல சில ஆவணங்களையும் நாம் சமர்பித்து இருக்கினே்றோம்.

பசில் ராஜபக்ச அமெரிக்காவில் எந்த தொழிலும் செய்யவில்லை.ஆனால் எம்மால் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களில் அவருடைய சொத்து விபரங்கள் அதற்கு முரணாக காணப்படுகிறது.

இலங்கையில் செய்த தொழில், பெற்றுக்கொண்ட பணத்தினூடாக அவர் இவ்வாறு சொத்துக்களை கோரி இருக்கின்றார்.

நாம் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டு ஏனைய தகவல்களை சேகரிப்பது காவல்துறையின் கடமையாகும்.

இது தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெற்றால் இன்னும் பல் தகவல்கள் கிடைக்கப்பெறும்.

பசில் ராஜபக்ச இரட்டை குடியுரிமை கொண்டவர் ஆவார். எனவே அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிரான சட்ட சட்ட நடவடிக்கையை விட பசில் ராஜபக்சவிற்கு எதிரான நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...

anura kumara
இலங்கை

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு – மூடப்பட போகும் பல அரச நிறுவனங்கள்!

பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடும்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த...

ranjan ramanayake d
இலங்கை

நானும் சிறையில் இருந்தவன் என்ற அடிப்படியில் சொல்கிறேன் – ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து.

  நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சிறைச்சாலைகளில் ஏற்படும்...

Accident
இலங்கை

இளைஞரின் உயிர் பறித்த விபத்து – தப்பி சென்ற சாரதி கைது.

  சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வாகன விபத்தை...