23 2
இலங்கைசெய்திகள்

அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் – முடங்கிய சேவைகள் வழமைக்கு

Share

அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் – முடங்கிய சேவைகள் வழமைக்கு

சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளமும் (Department of Government Printing) காவல்துறையின் யூடியூப் சேனலும் தற்போது மீளமைக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (02) தினத்திற்குள் இவற்றை வழமைக்கு கொண்டு வர முடியும் என அதன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சைபர் தாக்குதல்களை எந்த தரப்பினர் நடத்தினர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் (Department of Government Printing) இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த (Nirosh Ananda) தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்கள் முழுவதும் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு விரிவான உத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு தெரிவித்திருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் தற்போது இடம்பெற்ற சைபர் தாக்குதல் தொடர்பில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அனுமதியின்றி ஒருவர் பிரவேசித்துள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த இணையத்தளம் வேறு வெளி தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வருவது அவதானிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை பொலிஸின் யூடியூப் சேனல் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...