#Facebook நிறுவனம் தனது நிறுவனப் பெயரை மெட்டா (#Meta) என மாற்றுவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் Facebook தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவிக்கையில்.
“இனிமேல், நாங்கள் மெட்டாவேர்ஸ் ஆக இருப்போம், Facebook ஆக அல்ல. காலப்போக்கில், எங்கள் பிற சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் Facebook ஐப் பயன்படுத்த வேண்டியதில்லை.” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதமே இப் பெயர் மாற்றம் குறித்து அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவ் Metaverse இன் மூலம் டிஜிட்டல் முறையில் பரந்துபட்ட தொடர்பாடல்களை மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Technology
1 Comment