4 51
இலங்கைசெய்திகள்

வெடுக்குநாறிமலையில் தமிழ் மக்களின் வழிபாடு குறித்து ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

Share

வெடுக்குநாறிமலையில் தமிழ் மக்களின் வழிபாடு குறித்து ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

வவுனியா(Vavuniya) – வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ்மக்கள் நிம்மதியான முறையில் வழிபடுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்(T. Raviharan) வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இன்று (27) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, “வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கோ, பொதுமக்கள் சென்றுவருவதற்கோ எந்த வித தடையுமில்லை என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைவாக அங்கு மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அங்கு மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றபோதும், இந்த ஆலயத்திற்குச் செல்வதற்கான பிரதான வீதி மக்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால ஆட்சியாளர்கள் அவ்வீதியை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கமானது அவ்வீதியை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்தோடு, குறித்த ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளுக்காகச் சென்ற அடியவர்கள் குடிநீர் இன்றி மிகுந்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

இதேவேளை, தண்ணீர் தாகத்தால் தவித்த அடியவர்களுக்கு நீர் எடுத்துச்செல்லப்பட்டபோது காவல்துறையினரால் குடிநீர் கோவில் வளாகத்திற்குள் எடுத்துச்செல்லமுடியாது என தடுக்கப்பட்டுள்ளது.

நானும் காலையில் கோவிலுக்கு வழிபாடுகளுக்குச்சென்ற மக்களோடு சென்றிருந்தேன். இந்நிலையில் மாலை வரை தாகத்தால் தவித்து, குடிநீர் வராததால் கோவில் வளாகத்நிலிருந்த நீரோடையில் நீரை எடுத்து அருந்த வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.

அதனால் குடிநீரைப் பெறுவதற்காகவும், ஆலய வழிபாடுகளுக்கான நீரைப்பெறும் நோக்கிலும் ஆலய நிர்வாகத்தினர் தற்போது ஆலய வளாகத்திலேயே குழாய்க்கிணறு ஒன்றினை அமைப்பதற்கு தயாராக இருக்கின்றனர். எனவே ஆலயவளாகத்தில் குழாய்க்கிணறு அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இதேவேளை, குறித்த வெடுக்குநாறிமலை அமைந்துள்ள பகுதி தற்போது வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. எனவே ஆலயவளாகம் வனவளத் திணைக்களத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.

அத்துடன், குறித்த ஆலயம் பதிவுசெய்வதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. ஆகவே இந்த ஆலயத்தை பதிவுசெய்வதற்கு இடையூறாக இருக்கின்ற விடயங்களைக் களைந்து. கூடிய விரைவில் பதிவுசெய்வதற்கான நடடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மேலும் குறித்த ஆலயத்தில் அடையாளம் தெரியாதவர்களால் விக்கிரகங்கள் திருடப்பட்டிருந்தன. பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் ஆலய விக்கிரங்கள் ஆலய நிர்வாகத்தினரால் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றது.

மலை உச்சியிலுள்ள சிவலிங்கத்தின் மேலாக ஏற்கனவே இருந்ததைப்போல சிறிய அளவிலான பாதுகாப்புக் கூடாரம் அமைப்பதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகள் மேற்கொண்டபோது தடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. எனவே குறித்த பாதுகாப்புக் கூடாரம் அமைக்கவும் அனுமதிவழங்கப்படவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...