2 25
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் தாமரைக் ​கோபுரத்தைப் பார்வையிடுவதற்கான நேரம் நீடிப்பு

Share

பண்டிகைக் காலத்தில் தாமரைக் ​கோபுரத்தைப் பார்வையிடுவதற்கான நேரம் நீடிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீடிக்க தாமரைக் கோபுர முகாமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் 25 மற்றும் 26ம் திகதிகளில் தாமரைக் ​கோபுரம் காலை ஒன்பது மணி தொடக்கம் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறந்திருக்கும்.

எதிர்வரும் 27ம் திகதி காலை ஒன்பது மணி தொடக்கம் இரவு பதினொரு மணி வரை தாமரைக் கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.

மேலும் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி காலை ஒன்பது மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் தாமரைக் கோபுரம் அன்றைய தினம் விடியும் வரை திறந்திருக்கும்.

2025ம் ஆண்டின் புத்தாண்டு தினமான ஜனவரி 01ம் திகதி நள்ளிரவு தொடக்கம் அடுத்த நாள் ஜனவரி 02ம் திகதி மத்தியானம் 1 மணிவரை சுமார் 52 மணிநேரங்கள் வரை புத்தாண்டை முன்னிட்டு தாமரைக் கோபுரம் தொடர்ச்சியாக பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...

bus deesel
இலங்கை

டீசல் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் !

மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்படும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத்...

canada job
இலங்கை

கனடா மோகம் – பறிபோன எட்டு மில்லியன் ரூபா.

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்...