24 14
இலங்கைசெய்திகள்

இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவு தொடர்பில் சட்டமா அதிபர் விளக்கம்!

Share

இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவு தொடர்பில் சட்டமா அதிபர் விளக்கம்!

இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு தொடர்பில் சட்டமா அதிபரினால் நீதிமன்றுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு தொடர்பில் தேசிய பெறுகைகள் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிந்துரைகளைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஊடாக அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு நேற்று (18.12.2024) அவர் அறியப்படுத்தியுள்ளார்.

குறித்த கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனுவை சவாலுக்கு உட்படுத்தி எபிக் லங்கா தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் சுமதி தர்மவர்தன குறித்த விடயம் தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...