27 8
இந்தியாசெய்திகள்

இலங்கையில் கைதான தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ராகுல் காந்தி கடிதம்

Share

இலங்கையில் கைதான தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ராகுல் காந்தி கடிதம்

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி(Rahul Gandhi) கடிதம் எழுதியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியியட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் ராகுல் காந்தி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்தியாவின் டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதியிடம் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தவும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன், மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றுவதால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், குறித்த மீன்பிடி படகுகளை மீட்க இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை சிறைகளில் 141 தமிழக கடற்றொழிலாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக இந்திய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளார். அதில் 96 பேர் தண்டனை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களின் 198 படகுகளையும் இலங்கை அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக இந்திய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...