samayam tamil 1
செய்திகள்இந்தியா

அனுமதி மறுக்கப்பட்ட கொரோனாத் தடுப்பூசி எது தெரியுமா?

Share

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.

கோவக்சின் தடுப்பூசியை அங்கீகரிக்கக் கோரி, அத்தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தது.

இந்தியாவில் கோவக்சின் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரமளிக்கக் கோரியே உலக சுகாதார அiமைப்பிற்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் இப்பட்டியலில் இணைப்பதற்கு உலக சுகாதார அமைப்பினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இது குறித்து முடிவெடுக்கக் கூடிய நிபுணர் குழு, கோவக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டுமானால், தடுப்பூசி குறித்து இன்னும் அதிக தரவுகளை, பாரத் பயோடெக் நிறுவனம், வழங்க வேண்டும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...