யாழ்ப்பாணம் வடமராட்சி கப்புது வீதி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது தாயாரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பால வேலைக்காக வீதியில் வெட்டப்பட்ட கிடங்கில், மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பால வேலைக்காக குறுக்காக கட்டப்பட்ட சமிசையையும் தாண்டி பாலத்திற்குள் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பொன்னுத்துரை காண்டீபன் (வயது-40) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளான நபர், அவசர ஆம்புலன்ஸ் சேவை ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணகளை நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment