செய்திகள்
அதிகரித்துள்ள மசூதித் தாக்குதல்கள் – நைஜீரியாவில் 18 பேர் சாவு
நைஜீரியாவில் உள்ள மசூதியில் இடம்பற்ற துப்பாக்கி சூட்டில் 18பேர் சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜீரியாவின் மஷேகு பிரதேசத்தில் மசாகுகா கிராமத்தில் உள்ள மசூதியில் மக்கள் பலர் நேற்று அதிகாலை தொழுகையில் ஈடுபட்ட வேளையில் மசூதியை சுற்றி வளைத்த மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் சுமார் 18 கிராம மக்கள் சாவடைந்துள்ளனர் .
நைஜீரியாவில் இன வன்முறை பல நூற்றாண்டுகளாக இடம்பெற்று வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான பேர் சாவடைந்துள்ளனர்.
இச் சம்பவத்தால் நைஜீரியாவின் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பதற்றமான நிலை சூழ்ந்துள்ளது . குறிப்பாக, வடமேற்கு மாநிலங்களில் இதுபோன்ற வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
இதை போன்று ஒரு வாரத்திற்கு முன்பு வடமேற்கு சோகோடோ மாநிலத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மசூதியில் தாக்குதல் மக்கள் மத்தியில் பெரு அச்சத்தை ஏற்படுத்தயுள்ளது.
இதுகுறித்து அந்த மாநிலபொலிஸ் அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,
திடீரென மசூதியை சுற்றி வளைத்த தீவிரவாதிகள் தொடர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகவும் அதில் 18 பேர்சாவடைந்ததாகவும் 4 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார் .
மேலும் இந்த தாக்குதல் கிராம மக்களுக்கும் புலானி கால்நடை மேய்ப்பாளர்க்கும் இடையிலான மோதலாக இருக்குமென சந்தேகிக்கப்படுகின்றோமெனவும் தெரிவித்தார் .
#WORLD
You must be logged in to post a comment Login