8 8
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகள் மீதான தடை : இந்திய அரசின் முடிவை உறுதி செய்தது தீர்ப்பாயம்

Share

விடுதலை புலிகள் மீதான தடை : இந்திய அரசின் முடிவை உறுதி செய்தது தீர்ப்பாயம்

இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருவதால், விடுதலை புலிகள் அமைப்புக்கான தடையை நீடிக்கும் இந்திய மத்திய அரசின் முடிவை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019ல் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. இதற்கிடையே, இந்த அமைப்புக்கு தடை விதிக்கும் முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்படி, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ப்ரீதம் சிங் அரோரா தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது.

இந்த தீர்ப்பாயமானது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிப்பதில் ஆட்சேபனை இருப்பவர்கள் அல்லது அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விளக்கமளிக்கலாம் என தெரிவித்திருந்தது.

இதையடுத்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ(vaiko) உள்ளிட்ட பலர், புலிகள் அமைப்பு மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தீர்ப்பாயத்தை அணுகினர்.

மத்திய உள்துறை அமைச்சகம், தீர்ப்பாயத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘புலிகள் அமைப்பினர் தனிநாடு கோரிக்கையை இன்னும் கைவிடாமல், தலைமறைவாக செயல்பட்டு வருகின்றனர். நிதி திரட்டுதல் மற்றும் தனிநாடு குறித்த பிரசார நடவடிக்கைகளை அந்த அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.

‘வெளிநாடுகளில் வாழும் இந்த அமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்’ என, தெரிவித்திருந்தது.

இதையடுத்து, புலிகள் அமைப்பின் மீதான ஐந்தாண்டு கால தடையை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘புலிகள் அமைப்பின் நோக்கம், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துவதாக உள்ளது. எனவே, அந்த அமைப்பின் மீதான தடை செல்லும்’ என, தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...