4 6
இலங்கைசெய்திகள்

இறக்குமதி வரியால் வாகனங்களின் விலை உயர வாய்ப்பு

Share

இறக்குமதி வரியால் வாகனங்களின் விலை உயர வாய்ப்பு

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இயந்திரத் திறனுக்கு ஏற்ப வரி விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2025ஆம் ஆண்டு முதல் வாகன இறக்குமதிக்கான வாய்ப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இலங்கையின் பிரதான வாகன இறக்குமதி நிறுவனங்களின் பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதும் இந்த நாட்களில் அதிகரித்துள்ளது.

இந்த விளம்பரங்களினால் சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை மற்றும் அவற்றின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பயன்படுத்திய வாகனங்களை விட புதிய இறக்குமதி வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என வாகன இறக்குமதியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த பத்திரிகை விளம்பரங்களில் வெளியாகும் விலையில் வாகனங்களை வாங்க முடியாது எனவும் வாகன இறக்குமதி வரி அதிகரிப்பே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, 80 முதல் 100 இலட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்ட Toyota RAIZE கார் சுமார் 170 இலட்சம் ரூபாய் என்றும், 40 முதல் 50 இலட்சம் ரூபாய் வரை விற்கப்பட்ட AQVA கார் 100 இலட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், விரைவில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...