3 1 10
இலங்கைசெய்திகள்

அம்பாறையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் முதலைகள்… அச்சத்தில் மக்கள்!

Share

அம்பாறையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் முதலைகள்… அச்சத்தில் மக்கள்!

அம்பாறை (Ampara) மாவட்டம் – காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ள நீரில் இறந்த நிலையில் முதலைகள் கரை ஒதுங்கியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குறித்த முதலைகள் இன்று (25) இறந்து கரையொதுங்கியமை அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் அண்மைக்காலமாக பல முதலைகள் காணப்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இப்பாலத்தை அண்டிய பகுதிகளில் சுமார் 30ற்கும் அதிகமான முதலைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 10 முதல் 15 வரையிலான முதலைகளே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

தற்போது அங்கு பெய்துவரும் அடைமழை காரணமாக சுமார் 7 அடி முதல் 9 அடி வரையான முதலைகள் இறந்த நிலையில் நீரில் மிதந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியினால் பொதுமக்கள் சிரமத்துடன் பயணம் செய்வதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...