tamilnaadi 6 scaled
ஏனையவை

இன்றைய ராசி பலன் : 20 நவம்பர் 2024 – Daily Horoscope

Share

இன்றைய ராசி பலன் : 20 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 20.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 5, புதன் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம் ராசியில் உள்ள கேட்டை, மூலம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசி பலன் : 15 நவம்பர் 2024 – Daily Horoscope
Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 15, 2024 வெள்ளிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் மேஷம் ராசியில் உள்ள பரணி,கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். மிதுனம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு ஆதரவு இருக்கும். உங்களுக்கு புதிய பொறுப்புக்கள், பதவிகள் கிடைக்கும். குடும்பத் தொழிலில் துணையின் ஆலோசனைக்குப் பின்னர் முடிவு எடுக்கவும். காதல் திருமணத் திட்டங்கள் அங்கீகரிக்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களுடைய மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தினருடன் விருந்து, விழாக்களில் பங்கேற்பார்கள். பிள்ளைகளின் செயல் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் தேர்வு, விளையாட்டு போட்டிகளில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். குடும்ப உறவுகள் வலுவடையும். இன்று உறவுகளை அனுசரித்துச் செல்லவும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றிய மனமகிழ்ச்சி அடைவீர்கள். இன்று நண்பர்களுக்கு உதவும் முன் வருவீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வருமானத்தை உயர்த்த முயற்சி செய்பவர்களுக்கு பெரிய வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்க முடியும். உங்கள் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் தடைப்பட்ட வேலைகள் சிறப்பாக முடியும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உழைக்கும் வர்க்கத்தினருக்கு முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வரும். முக்கிய முடிவு எடுப்பதில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று குருவின் அருளைப் பெறுவது நன்மை தரவும். குறுகிய தூர பயணம் மகிழ்ச்சியை மேம்படுத்தும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் தேர்வு, போட்டி போன்ற முயற்சிகளில் மகத்தான வெற்றியை பெறலாம். இன்று குடும்ப பிரச்சனைகள் காரணமாக மன வருத்தம் அதிகரிக்கும். அன்புக்குரியவர்களுக்கு உதவு முன் வருவீர்கள். ஆக்கப்பூர்வமான வேலையில் ஈடுபடுவீர்கள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் துணையின் ஆலோசனை பெறுவது நல்லது. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் நிதி நிலை வலுவடையும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு தந்தையின் ஆலோசனை உதவும். உங்கள் சொந்த தொழிலில் முன்னேற்றமும், லாபத்தால் மன மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் வீட்டின் மூலம் நிதி ஆதாயங்கள் பெறுவீர்கள். முக்கிய வேலைகளை முடிக்கும் விஷயத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று கவலைத் தரும். அது தொடர்பான அலைச்சல் ஏற்படும். கடன் வாங்க நினைப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் திரும்ப அழைப்பதில் கடினமான சூழல் ஏற்படும். உங்களுக்கு நிதி சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது அதிக பணம் செலவழிக்க நேரிடும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக உடல்நிலை தொடர்பான பிரச்சனைகளில் அலட்சியப்படுத்த வேண்டாம். பணப்பரிவர்த்தனை, நிதி நிலையை கையால் பதில் கவனக்குறைவுடன் செயல்பட வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். இன்று உங்கள் வேலைகளை வெற்றி கிடைக்க சரியான திட்டமிடல் அவசியம். குடும்ப உறுப்பினர்களுடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று அரசு வேலை, பணிபுரியவர்களுக்கு முன்னேற்றமான நாள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். ஏதேனும் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும். காதல் வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் ஏற்படும். இன்று வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று தேவையற்ற சண்டைகள், வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டிய நாள். உத்தியோகத்தில் எதிரிகள் வேலையில் தொந்தரவு செய்ய நினைப்பார்கள். உங்களின் பேச்சையும், கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய நாள். புத்திசாலித்தனத்துடன் எந்த வேலையிலும் ஈடுபடுவது நல்லது. உங்கள் தொழில் தொடர்பாக பிறரின் ஆலோசனை ஏற்றுக் கொண்டாலும் முடிவு நீங்களே எடுப்பது நல்லது.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அன்புக்குரியவர்களுக்காக பணம் ஏற்பாடு செய்ய வேண்டியது இருக்கும். சிலருக்கு கண் சம்பந்தமான பிரச்சினைகள் தொந்தரவு ஏற்படுத்தும். நிதிநிலை சிறப்பாக இருக்கும் என்பதால் கடன் அடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். இல்லையெனில் உறவில் விரிசல் ஏற்படும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சோம்பேறித்தனத்தால் சில வேலைகள் தள்ளிப் போடுவீர்கள். இதனால் தேவையற்ற நஷ்டம் ஏற்படும். நீங்கள் எந்த ஒரு வேலையை எடுத்தாலும் சரியான திட்டமிடலும், சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது. சகோதரர்களுக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கும். அவர்களின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் சில குடும்பத்தினரின் உதவியால் நீங்கும். பிள்ளைகளின் செயல், முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள்.

Share
தொடர்புடையது
Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

Easter Sunday attacks
ஏனையவை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்குள்ளான சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் (Easter...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...