14 13
ஏனையவை

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமார்

Share

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமார்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இன்றையதினம் (19) முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்றிருந்த போதே அவர் இவ்வாறு அஞ்சலி செலுத்தினார்.

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தாெகுதியில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி (AITC) சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமார் இன்று பிற்பகல் 12.45 மணியளவில் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு சென்று சுடர் ஏற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தினார்.

அத்துடன் உரிமைப் பயணத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இனவழிப்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து அரசியல் உறுப்பினர்கள் அனைவருமாக சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த அஞ்சலியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran), மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...