1 25
உலகம்

தரம் குறைந்த உணவுப் பொருட்களை இந்தியாவில் விற்கும் நிறுவனங்கள்! சர்வதேச அறிக்கை அதிர்ச்சி தகவல்

Share

தரம் குறைந்த உணவுப் பொருட்களை இந்தியாவில் விற்கும் நிறுவனங்கள்! சர்வதேச அறிக்கை அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

Access to Nutrition Initiative என்ற அமைப்பு 30 நாடுகளில், தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்யும் Nestle, PepsiCo, Unilever ஆகிய உணவு நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தது.

இந்த ஆய்வில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தரம் குறைந்த உணவுப் பொருட்களையே விற்பதாக தெரிய வந்துள்ளது.

ஐந்து மதிப்பெண்ணுக்கு 3.5 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற உணவுப் பொருட்கள்தான் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆனால் இந்த நிறுவனங்கள் விற்பனை செய்த உணவுப் பொருட்கள், அதிலும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வெறும் 1.8 மதிப்பெண்ணாகவே இருப்பதாக அதிர்ச்சி அளிக்கிறது இந்த ஆய்வு.

இதுகுறித்து ATNI ஆய்வுக்குழு தலைவர் மார்க் விஜ்னே (Mark Wijne) கூறுகையில், “அரசுகள் உணவுத் தரம் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதுபோன்ற நிறுவனங்கள் ஏழ்மை நாடுகளில் என்ன மாதிரியான பொருட்களை விற்பனை செய்கிறதென்றே தெரியவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு அந்நாடுகளில் விற்பனையை அதிகப்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் அங்கு விற்கும் உணவுப் பொருட்களின் தரம் குறைந்துகொண்டே வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...

23 9
செய்திகள்உலகம்

நெதன்யாகுவைக் துரத்திச் சென்று அழிப்போம்: தீவிரமடையும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கொல்வோம்...

22 12
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஆரோக்கியமாக உள்ளார்: வெளியுறவு அமைச்சர் தகவல்

ஈரானின் புதிய உச்ச தலைவராக கடந்த மார்ச் 8ஆம் திகதி பதவியேற்ற மொஜ்தபா கமேனி, பதவியேற்பிற்குப்...