அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்றில், நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வாசிங்டன் மாநிலத்திலுள்ள தகோமா என்னும் இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகோமாவிலுள்ள வீடொன்றில் திடீரென இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், இரு பெண்கள் உள்ளடங்கலாக மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் அந்த வீட்டிலிருந்த மற்றுமொரு ஆண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது குறித்த வீட்டின் முன்னர் ஒருவர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார், இதுவரை குற்றவாளியோ அல்லது சந்தேகநபரோ கைதுசெய்யப்படாமையினால், சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து யாரையும் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவித்துள்ளனர்.
#world
Leave a comment