7 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர முயற்சித்த சட்டத்தரணிகள்: ரணில் வெளியிட்ட தகவல்

Share

அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர முயற்சித்த சட்டத்தரணிகள்: ரணில் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வழக்குகளை தொடர்வதற்கு சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் முயற்சித்த போதிலும் தாம் அதனை தடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மிகவும் சிறுபான்மையைக் கொண்ட பிரதமர் ஒருவரை நியமித்தமை மற்றும் தேர்தல் தினம் தொடர்பில் இவ்வாறு வழக்குத் தொடரப்படவிருந்ததாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மையான அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கம் அவர்களை மறந்துவிட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ஜாலிய விக்ரமசூரியவை
இலங்கை

 அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவருக்கு பிடியாணை.

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலை,மறைவாகியுள்ள, அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர்...

Semmani Manhole
இலங்கை

மண்டையோடுகளின்றி காணப்பட்ட என்பு தொகுதிகள் – செம்மணியில் அவலம்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,...

Histopathological examination
இலங்கை

மரணத்தில் சந்தேகம் – விசாரணை செய்ய கோரும் தந்தை.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில்...

chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...