23 17
இலங்கைசெய்திகள்

அறுகம் குடா பகுதிக்குள் ஊடுருவிய மொசாடின் விசேட திட்டம்

Share

அறுகம் குடா பகுதிக்குள் ஊடுருவிய மொசாடின் விசேட திட்டம்

அம்­பாறை, பொத்­துவில், அறுகம் குடா(Arugam Bay) பகு­தியில் இஸ்ரேல் சுற்­றுலா பய­ணிகள் மற்றும் அவர்­க­ளது தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படலாம் என வெளியான அச்­சு­றுத்தல் செய்தியினால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

 

குறிப்­பாக அறுகம் குடாவை மையப்­ப­டுத்தி 500 இற்கும் அதி­க­மான பொலிஸ் விஷேட அதி­ரடிப்படை­யினர், பொலிஸார், இராணுவத்தினர் சிறப்பு கடமைகளுக்­காக ஈடுபடுத்தப்பட்டு பாது­காப்பு நட‌­வ­டிக்­கைகள் தீவி­ரப்­ப‌­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 

அறுகம் குடா பகு­தி குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை தொடர்ந்து திடீரென படைகளை சுற்றுலா பகுதியில் அரசாங்கம் களமிறக்கியுள்ளமை வெளிநாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அதாவது ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற ஒருவருக்காக அமெரிக்கா இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

இவ்வாறான பின்னணியில் தாக்குதல் தொடர்பில் வெளியான இந்த எச்சரிக்கை ஒரு அப்பட்டமான போலி செய்தி என இலங்கையின் தேசிய பாதுகாப்பு படையும் நிராகரித்துள்ளது.

 

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அறுகம் குடா பகுதிக்குள் மொசாட்(Mossad) விசேட திட்டமொன்றுடன் ஊடுருவியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...