22 14
இலங்கைசெய்திகள்

எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

Share

எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

உள்நாட்டு சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கையில் எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

உலக சந்தையில் எரிவாயு வழங்குனரகள் தமது விலையை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு செய்யாவிட்டால், தங்களது இயக்கச் செலவுகளை ஈடுகட்டுவதில் கடும் நெருக்கடி ஏற்படும் என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் உள்நாட்டில் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனத்தின் இயக்கச் செலவுகள், ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் எரிவாயு தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யாதநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் இம்மாதம் 30ஆம் திகதி எரிவாயு விலை திருத்தத்தின் போது உரிய விலை உயர்வு இடம்பெறும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...