23 12
இலங்கைசெய்திகள்

ரணில் கோரிய சலுகைகள்: நிராகரித்த அரசாங்கம்

Share

ரணில் கோரிய சலுகைகள்: நிராகரித்த அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 16 சமையல்காரர்கள், 163 பாதுகாப்புப் பணியாளர்கள், 30 குடைகள் மற்றும் 20இற்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கிய விரிவான சலுகைகளை கோரினார். எனினும் தாம், அதனை நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்க விக்ரமசிங்கவிற்கு மூன்று வாகனங்கள் மாத்திரமே வழங்கப்படும் என ஜனாதிபதி, மாத்தறை தங்காலையில் நேற்று (19.10.2024) இடம்பெற்ற போது பேரணியின் போது தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொது நிதி மூலம் ஆதரவளிக்கப்படுவதை தடுக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரின் இல்லங்களில் முன்னர் வைக்கப்பட்டிருந்த இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகளை மீளப்பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்ட அநுரகுமார திஸாநாயக்க, இந்த வசதிகளை அவர்கள் தமது தனிப்பட்ட சொத்தாகக் கருதக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொதுமக்களின் பணத்தில் தனிப்பட்டவர்கள் சுகபோகங்கள் அனுபவிப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை இருந்தால், அதனை அரசாங்கம் உரிய முறையில் நிவர்த்தி செய்யும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...

car bike
இலங்கை

நுவரெலியாவில் கோர விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் நேற்று மாலை நுவரெலியா நோக்கி...