2 23
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதிலும் அரிசிக்கு தட்டுப்பாடு

Share

நாடு முழுவதிலும் அரிசிக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை உயர்த்தியதினை தொடர்ந்து நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் விலைகளை உயர்த்தியுள்ளனர்.

மேலும், நாட்டில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

பெரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை குறைப்பதாக கூறிய போதிலும் சந்தையில் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 210 ரூபா முதல் 230 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களும் சிவப்பரிசி, நாடு மற்றும் சம்பா அரிசி வகைகளை பாரிய அரிசி வியாபாரிகள் விற்பனை செய்யும் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

மின்கட்டணங்கள், டீசலின் விலை போன்றன குறைந்துள்ள நிலையிலும் அரிசி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக கூறி அரிசி விலையை அதிகரித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னதாக ஒரு கிலோ கிராம் எடையுடைய கீரி சம்பா அரிசி 400 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது.

தற்பொழுது ஒரு கிலோ கிராம் கீரி சம்பா 250 முதல் 270 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...