26 10
இலங்கைசெய்திகள்

வழக்குகளை தவிர்க்கும் ஜொன்ஸ்டன்

Share

வழக்குகளை தவிர்க்கும் ஜொன்ஸ்டன்

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சுகவீனத்தைக் காரணம் காட்டித் தனக்கு எதிரான வழக்குகள் மற்றும் விசாரணைகளில் முன்னிலையாகாமல் தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சட்டரீதியாக பதிவு செய்யப்படாத பென்ஸ் வாகனமொன்றைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள கடந்த வௌ்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

எனினும், மருத்துவக் காரணங்களினால் தன்னால் சமூகமளிக்க முடியாதிருப்பதாகவும், வேறொரு தினத்தை அதற்காக ஒதுக்கித் தருமாறும் அவர் தனது சட்டத்தரணி ஊடாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வர்த்தக அமைச்சராக செயற்பட்ட காலத்தில், சதொச நிறுவனத்தின் ஊழியர்களை தனது அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ் ஜொன்ஸ்டனுக்கு எதிராக விசாரிக்கப்படும் வழக்கு நேற்றைய தினம் (15) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த நல்லாட்சிக் காலத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருந்து அகலும் வரைக்கும் குறித்த வழக்கில் ஜொன்ஸ்டன் நீதிமன்றத்துக்கு முன்னிலையாகாமல் பல்வேறு காரணங்களை முன்வைத்து தப்பித்துக் கொண்டிருந்தார்.

அதேபோன்று, நேற்றைய விசாரணைக்கும் அவர் முன்னிலையாகவில்லை. அதற்குப் பதிலாக அவர் சுகவீனமுற்றிருப்பதாக மருத்துவ அறிக்கையொன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...