Maithripala Sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

ராஜபக்ஸவினரால் முடியும் என்றால் ஏன் என்னால் முடியாது: மைத்திரி கேள்வி

Share

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் முடிவடைந்து விடும் என சிலர் எண்ணிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் சிறிசேனவின் சிந்தனைகள் வேறு விதமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் நெருக்கமானவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், மைத்திரிபால சிறிசேன தனது எதிர்கால அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

தான் மீண்டும் அரச தலைவராகப் பதவிக்கு வர எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியாவிட்டால், முழுமையான அதிகாரங்களுடன் கூடிய பிரதமர் பதவிக்காவது வர வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு  எனவும் கூறப்படுகிறது.

பல ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ராஜபக்ஸவினருக்கு, மீண்டும் அரச அதிகாரத்திற்கு வர முடியுமாயின், எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்நோக்காத தன்னால், ஏன் அரச தலைவராகப் பதவிக்கு வர முடியாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் புதிதாக அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் நோக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் இயங்க செய்யும் முயற்சியில் சுதந்திரக் கட்சி தற்போது ஈடுபட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதே இதன் நோக்கம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...