2 6
இலங்கைசெய்திகள்

ரணிலை ஓரங்கட்டுவதில் முனைப்பு காட்டும் சஜித்

Share

ரணிலை ஓரங்கட்டுவதில் முனைப்பு காட்டும் சஜித்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் இந்நாட்டு அரசியல் களத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க முற்றாக ஓரங்கட்டப்பட வேண்டுமென்பதில் சஜித் பிரேமதாச தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி தங்களுடன் கூட்டிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலி்ல் போட்டியிடுவதாக இருந்தால் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவே நியமிக்கப்பட வேண்டும் என்று சஜித் தரப்பில் இருந்து கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி கூட்டணியின் செயலாளர் பதவியும் தமக்கே தரப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ருவன் விஜேவர்த்தன மற்றும் தலதா அதுகோரளை ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் தரப்புடன் கூட்டிணையாமல் தனித்துப் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதன் காரணமாக ஐ்க்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டுள்ளதாக அரசியல் ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...