2 38
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு நன்றி தெரிவித்த அநுர தரப்பு!

Share

ரணிலுக்கு நன்றி தெரிவித்த அநுர தரப்பு!

அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படவில்லை எனவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வரவிருக்கும் காலத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணம் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் எதிர்வரும் காலப்பகுதிக்கு தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உள்ளது.

இதேவேளை புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...