22 13
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்பு: கைசாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம்

Share

இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்பு: கைசாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம்

இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் வேலைவாய்ப்புகளுக்கு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதன் பிரகாரம் இலங்கைத் தொழிலாளர்கள் ஹோட்டல் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது என ஜனாதிபதியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (17 ) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர், “இஸ்ரேலில் உள்ள ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்புகள் ஆண்,பெண் இருபாலருக்கும் திறக்கப்பட்டுள்ளன. எனவே, அதற்காக விண்ணப்பிப்பவர்கள் NVQ மட்டம் 3 தரச்சான்றிதழ் பேற்றுக்கு வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் சில தினங்களில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

இதற்கிடையில், இஸ்ரேலில் கைத்தொழில் துறையில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை, எதிர்காலத்தில் நிர்மாணத்துறையில் தொழிலாளர்களை வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைவாய்ப்புகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு அங்கமாக கடந்தவாரம் இரண்டு குழுக்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் விவசாயத்துறையில் இதுவரை இரண்டாயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர். இவ்வேலைவாய்ப்புக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்கள் எந்தவொரு இடைத்தரகரிடமும் பணம் செலுத்த வேண்டிய அவசியமுமில்லை. அவ்வாறு பணம் பெறும் ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்படும்” என வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...