4 18
இலங்கைசெய்திகள்

நல்ல வைத்தியரை மாற்ற கூடாது: அலி சப்ரி வேண்டுகோள்

Share

நல்ல வைத்தியரை மாற்ற கூடாது: அலி சப்ரி வேண்டுகோள்

நல்ல வைத்தியரிடம் நீங்கள் சிகிச்சைக்குச் சென்று அதனால் நல்ல பலன் கிட்டும்போது, அந்த வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதை மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று (11.09.2024) புதன்கிழமை நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு பெரும் இக்கட்டான நிலைமையில் இருந்தது. அப்போது ஐ.எம்.எப். நாட்டில் அனைவரையும் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வருமாறு வலியுறுத்தியது.

ஆனால், எதிர்க்கட்சியினர் அதற்கு முன்வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு பிரதமர் பதவியை வழங்கவும் தயாராக இருந்தோம். அப்போதும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அன்று மக்கள் பட்ட கஷ்டங்கள் இன்று உள்ளனவா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்ல வைத்தியரிடம் நீங்கள் சிகிச்சைக்குச் சென்று அதனால் நல்ல பலன் கிட்டும்போது, அந்த வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதையும் மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்.

சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். சில கட்சிகள் தெற்கின் கட்சிகள் செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் பயணிக்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். என்றார்.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...