9 12
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னணியில் சதி – கடும் நெருக்கடியில் அரசியல்வாதிகள்

Share

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னணியில் சதி – கடும் நெருக்கடியில் அரசியல்வாதிகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போதைய கடவுச்சீட்டு பற்றாக்குறையானது இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் கடவுச்சீட்டு பெற வருபவர்கள் ஒரு கிலோ மீற்றர் வரை வரிசையில் நிற்கின்றனர் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விசாரணைகளுக்கமைய, நாளொன்றுக்கு சுமார் 3000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும். அடுத்த வருடமும் தற்போதுள்ள கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என பற்றாக்குறை இருப்பதாக பாசாங்கு செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் ஆகியோர் இது தொடர்பில் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தொழில் பயணம் என்ற போர்வையில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலுவலகம் அருகே நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும், இதனால் கடும் பாதுகாப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பான விசாரணையில் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதால், இதற்கு காரணமானவர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...