ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 06 செப்டம்பர் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 06 செப்டம்பர் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 06, 2024, குரோதி வருடம் ஆவணி 21 வெள்ளிக் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் சதயம், பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய முடிவுகளில் கூடுதல் கவனம் தேவை. சூழல் சாதனமற்றதாக இருக்கும். இன்று எந்த ஒரு வேலையும் சரியாக திட்டமிட்டு செய்யவும். பணம் சம்பந்தமாக சிலருடன் மனவருத்தம் ஏற்படும். பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். குடும்ப சூழல் குழப்பமாக இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களின் ஆளுமை அதிகரிக்கும். பிறரின் பாராட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. பிறரின் முகஸ்துதிக்கு மயங்காதீர்கள். இன்று உங்களின் தொழில், வியாபாரத்தில் புத்திசாலித்தனம் இலாபத்தை ஈட்ட உதவும். பணியிடத்தில் அழுத்தமான சூழல் இருக்கும். இல்லற வாழ்க்கையில் அனுசரித்துச் செல்லவும். உடல்நிலை சிறப்பாக இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் வெற்றி கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். சில பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான வேலைகள் சாதக பலனை தரும். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். குடும்பச் சூழல் இயல்பாக இருக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகம், தர்ம செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று மதியம் வரை உங்களின் வேலை, வியாபாரம் தொடர்பாக அலைச்சலான சூழல் இருக்கும். இன்று வருமானம் சிறப்பாக இருக்கும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்று பேராசைப்பட்டு எதிலும் இறங்க வேண்டாம். எதிர்காலம் கனவு தொடர்பாக நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் பேச்சில் கூடுதல் கட்டுப்பாடு அவசியம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலமையான பலன் தரக்கூடிய நாள். உடல் நலனில் கவனம் தேவை. பணியிடத்தில் உங்களின் சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் முரணாக இருக்கும். சொந்த தொழிலில் சில வாய்ப்புகளை இழக்க நேரிடும். உங்கள் வேலைகளை குறித்து நேரத்தில் முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாளில் தொடக்கமான ஆற்றலும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மதியத்திற்கு பிறகு உற்சாகத்துடன் செயல்பட முயலவும். உங்கள் வேலையில் சிறப்பான வெற்றியை பெறலாம். இன்று செலவுகளை கட்டுப்படுத்தவும். தொழில் சார்ந்த முதலீடு, வியாபாரத்தை விரிவுபடுத்துதல் போன்ற விஷயத்தில் சாதக பலன்கள் உண்டாகும். உங்களின் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று செழிப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் குழப்பமான மனநிலை இருக்கும். வேலை, வியாபாரம் தொடர்பாக அதிர்ஷ்டமான சூழல் இருக்கும். பணவரவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குடும்பத்தில் சிறிய விஷயங்களுக்கு எல்லாம் வாதிடுவதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் மரியாதையும், புதிய பொறுப்புகளும் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஆளுமை திறன் வளரும். பெரும்பாலான பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் குடும்ப உறவுகள் மீது உள்ள மனக்கசப்பு மாறும். வியாபாரத்தில் லாபம் ஈட்டக்கூடிய நாள். இன்று உங்கள் வேலை, பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்லவும். இல்லையெனில் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படும். புத்திசாலித்தனத்துடன் செயல்படவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நான் சாதகமற்றதாக இருக்கும். முக்கிய வேலைகளை புரிந்து கொள்வதிலேயே நேரம் வீணாகும். பணியிடத்தில் சில மன அழுத்தத்தில் வேலை செய்ய வேண்டியது இருக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக சாலக்குமற்ற சூழல் இருக்கும். வேலை தேடி அலைபவர்களுக்கு, வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு லாபம் கிடைக்கக்கூடிய நாள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உங்கள் வேலையில் மற்ற நாட்களை விட குறைந்த முயற்சியில் அதிக லாபம் பெறுவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று ஏதேனும் பொறுமையுடன் செயல்படவும், அவசரத்தைத் தவிர்க்கவும். புதிய தொழில் தொடங்க சாதகமான நாள். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயல்களில் கவனம் தேவை. உங்களின் இயல்பில் கோபம் அதிகரிக்கும். மனதில் ஆசைகளைக் கட்டுப்படுத்தவும். வேலை செய்யும் இடத்தில் லாபகரமான சூழல் இருக்கும். இன்று எதையும் நம்பிக்கையுடன் செய்து முடிக்கவும். பணம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் உண்டாகும். உடல்நிலை சீராக இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இன்று உங்களின் வேலை, ஆரோக்கியத்தில் கவனக் குறைவாக இருக்க வேண்டாம். ஏதேனும் ஒரு வகையில் பண ஆதாயம் இருக்கும். குடும்ப உறவில் மனக்கசப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கடினமான சூழல் இருக்கும். ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். வேலை, வியாபாரம் தொடர்பாக செயல்பாடு சிறப்பாக இருக்கும். இன்று அலைச்சலைத் தரக்கூடிய நாள்.