வரிப்பணம் வசூலிக்கும் தனிநபர்கள்: மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள இறைவரித் திணைக்களம்
வரிப் பணத்தை வசூலிக்கும் தனிநபர்கள், தம்மை வரியிறுப்பு அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் நிதி மோசடி குறித்து, இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மீண்டும் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் திணைக்களம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இறைவரித் திணைக்கள அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் சில நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொய்யாக வரிப் பணத்தை வசூலித்ததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இதுபோன்ற போலி அதிகாரிகளிடம் பணம் செலுத்தியிருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு, இறைவரித்திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.