12 28
இலங்கைசெய்திகள்

பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்க நல்லூரானுக்கு நாளை தேர்த் திருவிழா

Share

பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்க நல்லூரானுக்கு நாளை தேர்த் திருவிழா

பெயருக்கேற்றால் போல பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்க நல்லூரில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா நாள் நாளை நடைபெறவுள்ளது.

இம்மாதம் 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம், நாளை மறுதினம் தீர்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.

நல்லூரில் கொடியேற்றம் முதல் தீர்த்தத் திருவிழா வரை நடைபெறும் விழாக்களின் தத்துவங்கள் பண்டைய நூல்களில் இடம்பிடித்துள்ளன.

நாளை இடம்பெறவுள்ள தேர்த்திருவிழாவில் ஆறுமுகப் பெருமான் கஜாவல்லி, மஹாவல்லி சமேத ஸ்ரீ சண்முகப் பெருமானாக எழுந்தருவது வழமை.

நல்லூர்த் தேர் என்பது யாழ்ப்பாணத்தவர்களுக்கு மட்டுமன்றி தமிழர்கள் வாழும் இடமெங்கும் எழுச்சி மிக்க புனித நாளாக கருதப்படும்.

நல்லூர் கந்தனுக்கு அலங்கார கந்தன் என்ற சிறப்பு பெயர் உண்டு.

வடமாகாணத்தில் காணப்படும் முக்கிய முருகன் ஆலயங்களுக்கு விசேட பெயர்கள் கொண்டு அழைக்கப்படும்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் அபிஷேகக் கந்தன் எனவும், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் அன்னதானக் கந்தன் என்றும், நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அலங்காரக் கந்தன் என்றும் அழைக்கப்படும்.

மஹோற்சவ தினங்களில் அருளொளி வீசும் கம்பீரமான தோற்றத்துடனும், எல்லையில்லாக் கொள்ளை அழகு தரிசனமும் நல்லூரானின் சிறப்பாகும்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்துக்கென்று சில சிறப்பம்சங்களும், தனித்துவமான தன்மைகளும் உண்டு.

நேரந்தவறாத ஆறு காலப் பூஜை, அடியவர்கள் அனைவரும் சமமாகப் பாவனை செய்யப்படும் வகையில் ஒரு ரூபா அர்ச்சனைச் சிட்டை என்பன நல்லூரானின் சிறப்பம்சங்கள்.

அதேபோலவே நல்லூர் ஆலயத்தில் தினமும் அதிகாலை வேளையில் இடம்பெறும் பள்ளியெழுச்சியும், மாலை வேளையில் இடம்பெறும் பள்ளியறைப் பூஜையும் நல்லூரின் தனித்துவமான மரபுகளில் ஒன்று.

ஒவ்வொரு நாளும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து முருகப் பெருமானை சிறிய மஞ்சம் ஒன்றில் எழுந்தருளச் செய்து அவரைப் பாடிப் பரவிய படி அழைத்துச் சென்று பள்ளியறையில் அமரச் செய்து திரு ஊஞ்சல் பாடித் துயிலுற வைப்பர்.

காலையில் பள்ளியறை வாயிலில் நின்று திரு நல்லூருத் திருப்பள்ளியெழுச்சி பாடுவர்.

பின்பு முருகப்பெருமானை சிறு மஞ்சத்தில் ஏற்றி அழைத்து வந்து மூலஸ்தானத்தில் எழுந்தருளச் செய்து அன்றைய நாளின் அபிஷேக ஆராதனைகளை ஆரம்பிப்பதும் தனித்துவமான மரபு.

எல்லாவற்றுக்கும் மேலாக நல்லூரில் அமர்ந்து அருளாட்சி புரிகின்ற ஸ்ரீ சண்முகப் பெருமான், பழனி சந்நிதானத்தில் இருக்கின்ற தண்டாயுதபாணி, வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி, மூலவராக அமர்ந்து அருளுகின்ற வேலவர், காவற் கடவுளான வைரவப்பெருமான் மற்றும் நல்லூர்த் தேரடி என்பன மாண்பும் மகிமையும் மிக்க அம்சங்களாகும்.

Share
தொடர்புடையது
Jaffna Uni 1200x675px 28 10 25 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேல் மர்மம்: இரண்டு துப்பாக்கி மகசின்கள் மற்றும் வயர்கள் மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இரண்டு துப்பாக்கி மகசின்களும் (Magazines) மற்றும் வயர்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...

ravi karunanayake1
செய்திகள்இலங்கை

48.8 பில்லியன் செலவில் 1,775 சொகுசு வாகனங்கள் கொள்வனவு: ரவி கருணாநாயக்க கடும் குற்றச்சாட்டு!

அரசாங்கம் உரிய விலைமனு கோரல் இன்றி, 48.8 பில்லியன் ரூபாய் செலவில் 1,775 அதிசொகுசு வாகனங்களைக்...

25 690416ca1b001
செய்திகள்இலங்கை

வானிலை அறிக்கை: சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

25 6903a9422debc
செய்திகள்உலகம்

சீனா மீதான வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு – இரு நாட்டு உறவுகள் குறித்து ஜி ஜின்பிங் உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற...