நாட்டின் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மொழிக் கொள்கையை சமமாக பின்பற்ற வேண்டும்.
இதன் மூலமே நாட்டில் சமத்துவத்தைப் பேண முடியும். வெறும் வாய்வார்த்தை மூலம் வாக்குறுதிகளை வழங்குவதில் எவ்வித பயனும் இல்லை.
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு அனுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் ததலைமையகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளில் ஓர் அங்கமாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை திறந்து வைத்திருந்தார்.
இந்த விளையாட்டரங்கின் பெயர்ப்பலகையில் தமிழ்மொழி உள்ளடக்கப்படவில்லை.
இதில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரமே விளையாட்டரங்கின் பெயர் மற்றும் ஏனைய விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து தேசிய மொழிகள் தொடர்பான முன்னாள் அமைச்சர் தனது அதிருப்தியை தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Leave a comment