நாட்டில் எரிபொருள்கள் விலை அதிகரிக்கப்பட வேண்டியது தவிக்க முடியாத ஒரு நிலைமையாகும்.
நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை பொற்றோலியக் கூட்டுத் தாபனம் கடந்த ஒகஸ்ட்டில் 70 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளது.
இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதே, சிறந்த தீர்வாக அமையும் – என்றார்.
Leave a comment