22 14
இலங்கைசெய்திகள்

அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி விவகாரம் குறித்து விளக்கமளித்த திகாம்பரம்

Share

அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி விவகாரம் குறித்து விளக்கமளித்த திகாம்பரம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, வேலு குமார் (M. Velu Kumar) தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை காரணமாகவே தான் கோபமடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பி திகாம்பரம் (Palani Digambaram) கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த வேலு குமார் அண்மையில் அதிலிருந்து விலகி, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கத் தீர்மானித்தார்,

அதேசமயம் திகாம்பரம் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறார்.

இந்தநிலையில் வேலு குமார், தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியமையினாலேயே தாம் கோபமடைந்ததாக குறிப்பிட்டுள்ள திகாம்பரம், உண்மையான மக்கள் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது நிதானத்தை இழக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், குறித்த சம்பவம் ஆர்வமுள்ள தரப்பினரால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...