மாணவர்களுக்கு ஒரு டோஸ் 2
இலங்கைசெய்திகள்

மாணவர்களுக்கு ஒரு டோஸ் மட்டுமே

Share

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாத்திரமே வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாத்திரம் போதுமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கொவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸாக 6 மாதங்களின் பின் பைஸர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...