26 9
இலங்கைசெய்திகள்

காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரிகளால் அச்சுறுத்தப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

Share

காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரிகளால் அச்சுறுத்தப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரிகள் தமது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தொடர்ச்சியாக பல தடவைகள் அச்சுறுத்திவருவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி குற்றம் சுமத்தியுள்ளார்.

முல்லைத்தீவு(Mullaitivu) ஊடக அமையத்தில் நேற்றையதினம் (17.08.2014) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் 20 ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.

காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரிகள் தமது பெற்றோர்கள் உறுப்பினர்களை பல தடவைகள் அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதோடு கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலும் ஓ எம் பி அலுவலகத்தினர் செயற்பட்ட விதம் தமக்கு எதிரானதாகவே அமைந்திருந்தது.

ஓ எம் பி அலுவலகத்தின் செயற்பாடுகள் தமக்கு எதிராகவும் அரசாங்கத்தை காப்பாற்றும் வகையிலும் அமைந்திருப்பதாகவும் கொக்குத் தொடுவாய் புதைகுழி மூடப்பட்டமை அதிர்ச்சி அளிக்கின்றது.

இந்த புதைகுழியைச் சூழ பல மனித எச்சங்கள் மேலும் இருக்கின்றன என்று தெரிய வருகின்றது. அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்தவிதமான கரிசனையும் இல்லை.

இது காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எந்தவிதமான தாக்கத்தையும் செலுத்தப் போவதில்லை.

கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனித புதைகுழிக்கு உரிய நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 20 ஆம் திகதி கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு முன்பாக மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

குறித்த போராட்டத்துக்கு மத தலைவர்கள் ,அரசியல் பிரமுகர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள் , வர்த்தக சங்கத்தினர், சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் , பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேணண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...