14 14
உலகம்செய்திகள்

சூடுபிடித்துள்ள அமெரிக்க தேர்தல் பிரச்சாரம்: மீண்டும் கமலா ஹாரிஸை விமர்சித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்!

Share

சூடுபிடித்துள்ள அமெரிக்க தேர்தல் பிரச்சாரம்: மீண்டும் கமலா ஹாரிஸை விமர்சித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்!

மக்கள் அதிக பண வருமானமும் குறைவான வரியையும் செலுத்த வேண்டுமென்றால் தனக்கு வாக்களிக்குமாறு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க (USA) ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸின் (Kamala Harris) புதிதாக வெளியிடப்பட்ட பொருளாதாரத் திட்டத்தை கடுமையாக விமர்சித்து தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அவரது பொருளாதாரத் திட்டங்கள் அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் செலவை மோசமாக்கும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் தொடரந்தும் தெரிவிக்கையில், “கமலா ஹாரிஸ் நான்கு வருடம் ஜனாதிபதியானால் பொருட்களின் விலை தற்போது இருப்பதை விட 100 மடங்கு அதிகமாகும்.

அவரது திட்டத்தின்படி, ‘சோவியத் முறை’ விலைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவார். மேலும் கலிபோர்னியாவின் அதிக வரி கொள்கைகளை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவார்.

இதனால், ஒவ்வொரு அமெரிக்கர்களும் அவர்களின் வருமானத்தின் 80% வரை வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கமலா ஹாரிஸ் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது கம்யூனிஸ விலைவரம்பினை நடைமுறைப்படுத்தினால் இதுவரை இல்லாதது போல் அமெரிக்க மக்கள், பஞ்சம், பட்டினி, வறுமை போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...