10 18
இலங்கைசெய்திகள்

நாடொன்றை கட்டியெழுப்ப தெளிவான திட்டங்கள் வேண்டும்: சஜித் பிரேமதாச

Share

நாடொன்றை கட்டியெழுப்ப தெளிவான திட்டங்கள் வேண்டும்: சஜித் பிரேமதாச

நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு தெளிவான வேலைத் திட்டங்கள் இருக்க வேண்டும் எனவும் அரசாங்கம் ஒன்றுக்குள் மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு கருத்துக்கள் பரிமாறப்பட வேண்டுமெனவும் எதிர்கக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

களுத்துறை (Kalutara) பண்டாரகமவில் (17) இடம்பெற்ற பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு கருத்துக்கள் பரிமாறப்பட வேண்டும். இருந்தாலும் 24 மணித்தியாலமும், ஏழு நாட்களும், 365 நாட்களும், திருட்டை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள் கீழிருந்து மேல் வரை செல்கின்றது.

ஊழலும் மோசடிகளும் திருட்டுத்தனமும் நாட்டில் காணப்படுகின்றன. விசா புதுப்பிக்கத்தக்க சக்தி, எண்ணை கொடுக்கல் வாங்கல் ஆகிய கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக திருடப்பட்ட பணத்தை அவர்களின் வயிற்றை நிரப்புகின்ற அரசியலை செய்வதற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

இன்று பல தரப்பினர் ஒன்றிணைந்துள்ளனர், அதில் வைன் ஸ்டோர்ஸ், மதுபான அனுமதிப்பத்திரம் போன்ற வரப்பிரசாதங்களுக்கு அவர்களை பலியெடுத்துள்ளனர்.

தான் ஜனாதிபதியான பின்னர் அவ்வாறு மோசடியாகவும் இலஞ்சமாகவும் வழங்கப்பட்ட அனைத்து அனுமதி பத்திரங்களையும் இரத்து செய்வேன்.

அரசியல் இலஞ்சத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறான தவறுகளை செய்யாமல் சிந்தித்து செயல்படுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

எவரேனும் ஒருவர் கொள்கை திட்டத்துடனும் வழிகாட்டல்களுடனும் அரசியல் பயணங்களை முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடனும் இணைந்து கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் பணத்துக்காகவும் ஊழலுக்காகவும் மோசடிகளுக்காகவும் இணையவில்லை.

சிறந்த கொள்கை திட்டத்துடன் இணைந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஊழல் மிக்க திருட்டுத்தனமான அரசியலை நிறுத்துவதற்கான இடவேண்டும்.

தனி மனிதன் திருந்தாமல் நாட்டை திருத்த முடியாது என்று பஞயாசிக தேரர் குறிப்பிட்டாலும், இன்று நாட்டில் ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்களும் அவர்களின் சகாக்கள் கூட்டமும் ஒன்றாக இணைந்து கொண்டு சுகபோக வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக செயல்படுகிறார்கள்.

220 இலட்சம் மக்களின் முன்னேற்றமே ஐக்கிய மக்கள் சக்தி அபிவிருத்தி என்பதாக காண்கின்றது. அபிவிருத்தி என்று தொகைகளை காண்பித்து பயனில்லை. அபிவிருத்தியை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும். அதன் பிரதி பலனை அனுபவிக்க வேண்டும்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...