உலகம்
அறிவியலின் உச்சம்: மார்பக புற்றுநோயை முன்கூட்டியே அறியும் தொழில்நுட்பம்
அறிவியலின் உச்சம்: மார்பக புற்றுநோயை முன்கூட்டியே அறியும் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மார்பக புற்றுநோயை 5 ஆண்டுக்கு முன்பே கண்டறிய முடியும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் (Massachusetts Institute) மற்றும் ஜமீல் கிளினிக் (Jameel Clinic) ஆகியவை இணைந்து மார்பக புற்றுநோயை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த வகையில், குறித்த தொழிநுட்பம் கடந்த 2021-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்காவின் பல மருத்துவமனைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், “அமெரிக்காவில் மார்பக புற்றுநோயை மேமோகிராம் மூலம் கண்டறிய முடியும் என்றாலும், சில நேரங்களில் மருத்துவர்களால் முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை.
இதனை முன்கூட்டியே கண்டறியும் வகையில் ‘மிராய்’ (Mirai) என்ற பெயரில் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே மார்பக புற்றுநோயை கண்டறியலாம். இதனால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.