KAJA
இலங்கைசெய்திகள்

ஒன்றரைக் கோடி பெறுமதியான கஜமுத்துகளுடன் மூவர் கைது!

Share

வவுனியாவில் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்கள் நான்கை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்தபோது வவுனியாவிலுள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு முன்பாக வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்து 4 கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...