24 66a4d7a0c3ad3
இலங்கைசெய்திகள்

காவல்துறை மா அதிபர் விவகாரம்: ஜனாதிபதி தேர்தலில் செலுத்தும் தாக்கம்

Share

காவல்துறை மா அதிபர் விவகாரம்: ஜனாதிபதி தேர்தலில் செலுத்தும் தாக்கம்

சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ஜனாதிபதி தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் செலுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayaka) தெரிவித்துள்ளார்.

எனினும், சிறிலங்காவின் சிரேஷ்ட காவல்துறை மா அதிபர்களின் உதவியுடன் தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது காவல்துறை மா அதிபர் இல்லை எனவும் இதனால் தேர்தல்கள் நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்படுமெனவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த பின்னணியில், காவல்துறை மா அதிபர் இல்லாவிட்டாலும், அறிவிக்கப்பட்ட திகதியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படுமெனவும், இதனை வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள் சரிவர பின்பற்ற வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் வழிகாட்டுதல்களை பின்பற்ற மறுக்கும் மற்றும் அதனை எதிர்த்து செயல்படும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள தேர்தல்களை கண்காணிக்கும் அனைத்து அமைப்புக்களும் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும், சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல்கள் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1536x864 cmsv2 32bbee6e d1cd 5a5c adf0 bcfb4d4522bb 9590501
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் பேருந்து விபத்து: 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் இடம்பெற்ற கோர பேருந்து விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக...

images 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எல்ல சுற்றுலா வலயத்தில் ஏற்பட்ட அமைதியின்மை: இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிரடியாக இடமாற்றம்!

எல்ல (Ella) சுற்றுலா வலயத்தில் வெளிப்பிரதேச வாகனச் சாரதிகளுக்கும் உள்ளூர் வாகனச் சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட...

25 68de585f85210 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை மறுதினம் முதல் வடக்கு ரயில் பாதை முழுமையாகத் திறப்பு: மீண்டும் ஓடத்தொடங்கும் ‘யாழ்தேவி’!

புனரமைப்புப் பணிகள் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கம், தற்போது ரயில்...

1528176000 protesst l
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 5-க்குள் தீர்வு வேண்டும்; இல்லையேல் போராட்டம் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை!

பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறினால், ஜனவரி மாதம் 5 ஆம்...