1536x864 cmsv2 32bbee6e d1cd 5a5c adf0 bcfb4d4522bb 9590501
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் பேருந்து விபத்து: 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Share

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் இடம்பெற்ற கோர பேருந்து விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து யோக்யகர்த்தா நகரத்தை நோக்கி 35 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இடத்திலேயே 6 பயணிகள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

எஞ்சிய பயணிகள் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதிக வேகம் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் உள்ளூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...