24 3
இலங்கைசெய்திகள்

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்ட்ட இலங்கையின் முக்கிய வீரர்

Share

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்ட்ட இலங்கையின் முக்கிய வீரர்

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக குழாமில் இருந்து நீக்கப்ட்டுள்ளார்.

இந்திய அணி தற்போது 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை மற்றும் இந்தியா இடையிலான டி20 தொடர் ஜூலை 27, 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது

கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குறித்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் ஒப்புதல் கிடைத்த நிலையில் சரித் அசலங்க தலைமையிலான இலங்கை குழாம் நேற்று (23) இலங்கை கிரிக்கெட் சபையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

டி20 உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் தலைமை பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகிய நிலையிலேயே உப தலைவராக செயற்பட்ட சரித் அசலங்கவுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் சோபித்த அனுபவ வீரர் தினேஷ் சந்திமால் நீண்ட இடைவெளிக்குப் பின் டி20 சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ளார்.

எல்.பி.எல். தொடரில் சோபித்த மற்ற வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ, இளம் சகலதுறை வீரர் சமிந்து விக்ரமசிங்க மற்றும் அதிரடி துடுப்பட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆரம்ப வீரரான அவிஷ்க பெர்னாண்டோவும் அணிக்குத் திரும்பியுள்ளார். மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர்களில் ஆடுவதற்காக இந்திய அணி நேற்று முன்தினம் (22) இலங்கை வந்தடைந்த நிலையில், டி20 தொடர் நடைபெறும் பல்லேகலவை சென்றடைந்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் எதிர்வரும் ஜூலை 27, 28 மற்றும் 30 ஆம் திகதிகளில் பல்லேகலவில் நடைபெறவுள்ளது.

ரோஹித் ஷர்மா டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலேயே இந்திய டி20 அணி களமிறங்கவுள்ளது.

Share
தொடர்புடையது
Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...

articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...