நாட்டில் அமுலிலுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவை மீது விதிக்கப்பட்டிருந்த விலைக் கட்டுப்பாடுகளை நீக்கவே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அவசியமின்றி பொருட்களின் அதிக விலை உயர்வுக்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி குறித்த சந்திப்பில் அறிவுறுத்தியுள்ளார் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Leave a comment