உலகம்
உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம்: உருவாகியுள்ள உலகப்போர் அச்சம்
உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம்: உருவாகியுள்ள உலகப்போர் அச்சம்
உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து அச்சத்தை உருவாக்கும் வகையில் இணையத்தில் வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன.
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து ஊடக நிறுவனங்கள், விமான சேவைகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, நாம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளோம் என்னும் ரீதியில் இணையத்தில் செய்திகள் பரவத் துவங்கியுள்ளன.
பலரும், இது மூன்றாம் உலகப்போரின் துவக்கமாக இருக்கலாம் என்று, புடினுடைய வேலையாக இருக்கலாம் என்றும் கருத்துக்களை வெளியிடத் துவங்கியுள்ளார்கள்.
மூன்றாம் உலகப்போர் ஒரு சைபர் போராகத்தான் இருக்கும் என்று படித்திருக்கிறேன், ஆக, இது மூன்றாம் உலகப்போரின் துவக்கமாக இருக்கலாம் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னொரு பக்கம், மைக்ரோசாஃப்ட் பாதிப்பை கேலி செய்யும் விதத்தில் எலான் மஸ்க் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ளார்.