இலங்கை
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம் குறித்து முன்பே கணித்த ஜோதிட நிபுணர்
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம் குறித்து முன்பே கணித்த ஜோதிட நிபுணர்
உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து ஊடக நிறுவனங்கள், விமான சேவைகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டு ஜோதிடக்கலை நிபுணரான ஏதோஸ், மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம் குறித்து முன்பே கணித்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
எலிசபெத் மகாராணியின் மரணம், கோவிட், எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள், மன்னர் சார்லஸின் சிறுநீரக மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பிரச்சினைகள் என பல்வேறு விடயங்களை துல்லியமாக கணித்தவர், பிரேசில் நாட்டவரான ஏதோஸ் (Athos Salomé, 36).
2024ஆம் ஆண்டு, மூன்று நாட்கள் உலகம் இருளில் மூழ்கும் என்று கூறியிருந்தார் ஏதோஸ். மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியுள்ளதைத் தொடர்ந்து, அந்த நேரம்தான் இப்போது வந்துவிட்டதோ என பலரும் வியக்கத் துவங்கியுள்ளார்கள்.
இந்த ஆண்டின் துவக்கத்தில், போர்முறைகளில் மின்காந்த துடிப்பு தொழில்நுட்பம் (Electromagnetic Pulse technology (EMP) போன்ற கண்டுபிடிப்புகள், உலகில் பல மோசமான தாக்கங்களை உருவாக்ககூடும் என்று கூறியிருந்தார் ஏதோஸ்.
தான் கணித்த மூன்று நாட்கள் இருள் என்பது, மின்காந்த துடிப்பு தொழில்நுட்பம் தொடர்பான சோதனைகள் மற்றும் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் வகையில், மோதிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையில் அதிகரிக்கும் பதற்றம் முதலானவை தொடர்புடையது என கூறியிருந்தார் ஏதோஸ்.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா, வடகொரியா போன்ற நாடுகள், அமைதியாக, இந்த மின்காந்த துடிப்பு தொழில்நுட்பத்தை அதிக சேதம் ஏற்படாதவகையில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக பயன்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.