“அன்புள்ள கணவரே உங்களை விவாகரத்து செய்கிறேன் ” : இளவரசியின் பதிவால் பரபரப்பு
டுபாய்(dubai) இளவரசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் மற்றும் துணை அதிபர் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா துபாயின் இளவரசியாக இருந்து வருகிறார்.
ஷேக்கா மஹ்ராவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பிப் முஹம்மது பின் ராஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த தம்பதியினருக்கு அண்மையில் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அன்புள்ள கணவரே. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நேரத்தை அதிகம் செலவிடுவதால், உங்களை நான் விவாகரத்து செய்கிறேன். உங்கள் முன்னாள் மனைவி என பதிவு செய்துள்ளார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் துபாய் இளவரசியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவரது கணவர் மற்றும் இளவரசியின் தந்தை இருவரும் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.