8 11 scaled
உலகம்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

Share

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

சோறு மற்றும் கறி (Rice and curry), ப்ரைட் ரைஸ் (Fried rice) மற்றும் கொத்து (Koththu) என்பவற்றின் விலை 25 ரூபாயால் குறைக்கப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பரோட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என்றும் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று (16) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் 22.5 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission) அறிவித்துள்ளது.

பொதுமக்கள் மத்தியில் இடம்பெற்ற கருத்தாடல்களை அடுத்தே இந்த குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.

மின்சாரக்கட்டணம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலையும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...

Screenshot 2026 02 14 121516
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் ட்ரம்ப் குறித்த விவாதம்: மகளைச் சுட்டுக்கொன்ற தந்தை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் (Epstein) கோப்புகள் குறித்த அரசியல் விவாதத்திற்குப்...