15 1
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர் தொடர்பில் அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை

Share

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர் தொடர்பில் அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை

மியன்மாரிலும் (Myanmar) ரஷ்யாவிலும் (Russia) சிக்கியுள்ளவர்களை நாட்டுக்குக் கொண்டுவர அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10) விசேட கூற்றொன்றை முன்வைத்துக் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில், “எமது நாட்டைச் சேர்ந்த 49 பேர் மியன்மாரிலும் மற்றொரு சாரார் ரஷ்யாவிலும் சிக்கியுள்ளனர். ரஷ்யாவில் சிலர் இறந்தும் போயுள்ளனர். இவ்வாறு சிக்கியுள்ள தரப்பினரை எப்படியாவது இலங்கைக்கு அழைத்து வருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.

இரண்டு பயங்கரவாத முகாம்களிலும் எமது நாட்டையும் எத்தியோப்பியாவையும் சேர்ந்தவர்கள் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டு 252 நாட்கள் கடந்துவிட்டன.

இதுவரை, இந்தியா (India), நேபாளம் (Nepal), உகாண்டா (Uganda), மொராக்கோ ஆகிய நாடுகள் தமது இராஜதந்திர உறவுகள் மூலம் தங்கள் நாட்டு இளைஞர்களை மீட்டுள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொழில் தருவதாக கூறி ஏமாற்றி மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர், பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இந்நாட்டு இளைஞர்கள் யுவதிகளின் பெற்றோர்கள் இணைந்து நேற்று நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மியன்மாரில் சிக்கியுள்ள இளைஞர் யுவதிகள் குறித்து ஆராய ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே தலையிட்டு, இதற்காகப் பிரத்தியேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அடங்கிய குழுவொன்றை மியன்மாருக்கு அனுப்பி இருந்தது.

இந்த பிரச்சினைகளை அரசியலாக்காமல் இந்த இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை குறித்து சிந்தித்து எம்மாலான நடவடிக்கைகளை எடுத்தோம். துபாய் வழியாகச் செயல்படும் இணைய விசா மோசடி மூலமே இவர்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். எனவே இவ்விடயத்தில் அரசாங்கத்தின் முறையான தலையீடு அவசியமாகும்” என தெரிவித்துள்ளார் என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...